Saturday, 16 April 2016

இரண்டு சிறுநீரகமும் செயலிழந்த நிலையில் உள்ள எமது முஸ்லிம் சகோதரனுக்கு உதவி செய்யுங்கள்

அஸ்ஸலாமு அலைக்கும் இரண்டு சிறுநீரகமும் செயலிழந்த நிலையில் எமது முஸ்லிம் சகோதரனுக்கு உங்களால் முடிந்த உதவிகளை அல்லாஹ் வுக்காக செய்யுங்கள்  
அட்டாளைச்சேனை சேர்ந்த ஹாரீஸ் தற்பொழுது இரண்டு சிறுநீரகமும் செயலிழந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் நான்கு மாதமாக சிகிச்சை பெற்று வருகின்றhர் இப்பொழுது அவசரமாக சிறுநீரக மாற்று சத்திரசிகிச்சை செய்ய வேண்டும் என்று வைத்தியர்கள் கூறியுள்ளார்கள் சத்திரசிகிச்சை செய்வதற்கு 3000000ரூபா தேவைப்படுகிறது எனவே உங்களால் முடிந்த உதவிகளை அல்லாஹ் வுக்காக செய்யுங்கள் அல்லாஹ் உங்களுக்கு பரக்கத் செய்வானாக.


Account. 1060655  (m.i.hameed)
Bank of ceylon .
Akkaraipattu


"அல்லாஹ்வின் திருமுகத்தை நாடியே அல்லாது (வீண் பெருமைக்காகச்) செலவு செய்யாதீர்கள். நல்லவற்றிலிருந்து நீங்கள் எதைச் செலவு செய்தாலும், அதற்குரிய நற்பலன் உங்களுக்கு பரிபூரணமாத் திருப்பிக் கொடுக்கப்படும்; நீங்கள் அநியாயம் செய்யப்பட மாட்டீர்கள்." (அல்குர்ஆன்.2:272)

ஸியோனிஸ அமைப்பில் இணைந்த பாகிஸ்தானியரான நூர் தஹரி!

பாகிஸ்தானைச் சேர்ந்த நூர் தஹ்ரி என்பவர் ஸியோனிஸ அமைப்பில்( the Zionist Movement) அங்கத்தவராகியிருக்கிறார்.

 ஸியோனிஸ அமைப்பில் பிரித்தானிய கிளையில் அங்கத்துவம் பெற்றுள்ள நூர் தஹரி பலஸ்தீனம் இஸ்ரேலர்களுக்கு சொந்தமானது என வாதிட்டும் வருகிறார்.

இஸ்ரேல் ஓர் இனவாதமற்ற நாடு என்றும் இஸ்ரேலில் வாழும் அரபு முஸ்லிம்கள் நிம்மதியாக வாழ்ந்து வருவதாகவும் கூறியிருக்கிறார். இவரின் முகப்புத்தக பக்கம்
Noor Dahri  மேலும் தகவல்களுக்கு http://www.israelandstuff.com/pakistani-muslim-tells-why-he-joined-the-zionist-movement என்ற பக்கத்தை பார்வையிடவும்.


பீகாரில் ஹிந்துத்துவா - முஸ்லிம்கள் இடையே மோதல் – பள்ளிவாசல், கடைகள் மற்றும் வாகனங்களுக்கு தீ வைப்பு.


பீகாரின் கோபால்கஞ் மாவட்டம் மிர்கஞ் பகுதியில் உள்ள மதீனா பள்ளிவாசல், இன்று ஜும்மா தொழுகையின் போது இமாம் குத்பா உரை செய்தார், அந்த வழியாக ராமர் தேரை ஹிந்துத்துவாயினர் அதிகமான ஒலியை ஸ்பிகரில் வைத்து இழுத்து வந்தனர்.
பள்ளி அருகே வந்த போது முஸ்லிம்கள் தொழுகை நடத்திக்கொண்டு இருக்கிறோம் ஆகையால் சத்தம் எழுப்பமால் அமைதியாக கடந்துசெல்ல கூறினர்.

கைரியா அதிபரின் தவறுகளை சுட்டிக்காட்டியதால் அச்சுறுத்தல்!

Colombo Mail Today பக்கத்தில் வெளியான கைரிய்யா பாடசாலை திறப்பு விழா தொடர்பான செய்தியை ஜீரணித்துக்கொள்ள முடியாத பாடசாலை நிர்வாகம் திணறிக்கொண்டிருக்கிறது. அதன் தற்போதைய பெற்றார் ஒருவரான பிரதேச அரசியல்வாதி ஒருவர் இந்த செய்தியை வெளியிட்டவருக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்து வருவதாக அறிய வருகிறது.
பாடசாலை நிர்வாகத்தால் ஐதேக பாராளுமன்ற உறுப்பினர் முஜீபுர் றஹ்மானுக்கு புதுக் கட்டிட திறப்பு விழாவிற்கு அழைப்பு விடுக்கப்படாமை தொடர்பாக கேள்வி எழுப்பியதை அதே கட்சியைச் சேர்ந்த இந்த பிரதேச அரசியல்வாதி பாடசாலை நிர்வாகம் செய்தது சரி என்ற ரீதியிலேயே கருத்து தெரிவித்து வந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.

கோவிலுக்குள் பெண்கள் நுழைந்ததால் கற்பழிப்புகள் அதிகரிக்கும் என துவாரகா சங்கராச்சாரியார் பேச்சால் புதிய சர்ச்சை!

மராட்டிய மாநிலம் அஹமத் நகரில் புகழ்பெற்ற சனி சிங்னாபூர் கோவில் உள்ளது. இந்த கோவிலின் உள்ளே திறந்தவெளி பகுதியில் அமைந்துள்ள கருவறையில் பெண்கள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. சுமார் 400 ஆண்டுகளாக நடைமுறையில் உள்ள இந்த தடைக்கு எதிராக பெண்கள் அமைப்பினர் போராடி வந்தனர்.
இந்த பாலின பாகுபாடு தொடர்பாக பூமாதா படை அமைப்பினர் மராட்டிய ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, சனி பகவான் கோவில் கருவறையில் நுழைய பெண்களுக்கு அனுமதி வழங்கி கடந்த 1-ந்தேதி தீர்ப்பளித்தது.

அமைச்சரவையில் மாற்றம் ?

அடுத்து வரும் சில மாதங்களில் அமைச்சரவையில் மாற்றங்களை கொண்டு வர இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இந்த அமைச்சரவை திருத்தத்தின் ஊடாக அரசாங்கத்தின் பிரபல அமைச்சர்கள் பலர், தற்போது வகிக்கும் அமைச்சு பதவிகளை இழக்க வாய்ப்புள்ளதாக தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
நல்லாட்சி அரசாங்கத்தின் முடிவுகளுக்கு பாதிப்பேற்படுத்தும் வகையில் செயற்படுகின்ற பிரபல அமைச்சர்கள் சிலர் தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது. இந்நிலையில் குறித்த அமைச்சர்கள் தொடர்பில் அமைச்சரவைக்குள்ளும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

சம்பூர் அனல் மின் நிலையம் தொடர்பில் மக்களின் கருத்துக்களுக்கு தலை வணங்க வேண்டும்- ஞா.ஸ்ரீநேசன்

சம்பூர் அனல் மின் நிலையம் தொடர்பில் மக்களின் கருத்துக்களுக்கு தலை வணங்க வேண்டும் என தமிழ்த் தேசி கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்ஞா.ஸ்ரீநேசன் தெரிவித்தார்.

இந்த விடயம் தொடர்பாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அக்கறையுடனும், அறிவுபூர்வமாகவும்செயல்படும் என அவர்  கூறியுள்ளார்.
மட்டக்களப்பு – பெரியபோரதீவில் சித்திரைப் புத்தாண்டு விளையாட்டு விழா நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.

அமெரிக்காவின் அறிக்கைக்கு வெகுவிரைவில் பதில் அளிக்கப்படும் ; லக்ஷ்மன் கிரியெல்ல

மனித உரிமைகள் தொடர்பில் அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தினால் தயாரிக்கப்பட்ட அறிக்கையை ஆராய்ந்து இன்னும் சில தினங்களில் நிலை்பாட்டை வெளியிடவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
உலக நாடுகளை அடிப்படையாகக் கொண்டு அமெரிக்க இராஜாங்க திணைக்களம் வருடாந்தம் மனித உரிமைகள் தொடர்பான அறிக்கையொன்றை கடந்த புதன்கிழமை வெளியிட்டிருந்தது.
யுத்தத்தின் பின்னர் அதன் வடுக்களிலிருந்து மீண்டுவரும் ஸ்ரீலங்கா, கடந்த காலத்தில் மனித உரிமையைப் பாதுகாப்பதற்கு கடும் பிரயத்தனம் எடுத்துள்ளதாக இவ்வருட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த பிரயத்தனத்திற்கு அறிக்கையின் ஊடாக பாராட்டும் தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும், மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட குற்றவாளிகள் தொடர்ந்தும் தண்டனையிலிருந்து தப்பித்துக்கொண்டிருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இது குறித்து ஊடகமொன்றிற்கு கருத்து வெளியிட்டுள்ள சபை முதல்வரும் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல, புதிய அரசாங்கம் நாட்டில் ஜனநாயகத்தையும், மனித உரிமையையும் பலப்படுத்தியிருப்பதாகக் கூறியுள்ளார்.
இதேவேளை சிவில் அமைப்புக்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் நபர்கள் மீது விடுக்கப்படும் அழுத்தங்கள் தொடர்பாகவும், அமெரிக்காவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் அமெரிக்காவின் இந்த அறிக்கையை விரிவாக ஆராய்த பின்னர் இது குறித்து அரச தரப்புடன் கலந்துரையாடிய பின் நிலைப்பாடு அறிவிக்கப்படும் என்று அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல மேலும் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கன் விமானம் சிங்கப்பூரில் தரையிறக்கி திடீர் சோதனை

இலங்கை நோக்கி புறப்­பட்டு சிறிது நேரத்தில் மீண்டும் சிங்­கப்பூர் ஷேங்கி சர்­வ­தேச விமான நிலை­யத்தில் தரை­யி­றக்­கப்­பட்ட ஸ்ரீலங்கன் விமானம் மீண்டும் நேற்று அதி­காலை இலங்­கையை வந்­த­டைந்­துள்­ளது.