Saturday 16 April 2016

சம்பூர் அனல் மின் நிலையம் தொடர்பில் மக்களின் கருத்துக்களுக்கு தலை வணங்க வேண்டும்- ஞா.ஸ்ரீநேசன்

சம்பூர் அனல் மின் நிலையம் தொடர்பில் மக்களின் கருத்துக்களுக்கு தலை வணங்க வேண்டும் என தமிழ்த் தேசி கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்ஞா.ஸ்ரீநேசன் தெரிவித்தார்.

இந்த விடயம் தொடர்பாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அக்கறையுடனும், அறிவுபூர்வமாகவும்செயல்படும் என அவர்  கூறியுள்ளார்.
மட்டக்களப்பு – பெரியபோரதீவில் சித்திரைப் புத்தாண்டு விளையாட்டு விழா நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.


இந்த நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
நாட்டைப் பிளவு படுத்தாமல் ஒரே நாட்டில் இரண்டாம்தர பிரஜைகளாக அல்லாமல் ஏனைய இனத்துடன்,சமத்துவமாகவும், சம சுதந்திரத்துடனும் வாழக்கூடிய ஒரு பிராந்திய சுயாட்சியை பெறுவதற்காக இந்த அரசியலமைப்பு சபை எற்படுத்தப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

சர்வதேசத்தின் முழுமையான பங்களிப்புடன் நகர்த்தப்படுகின்ற நகர்வு என்பதால் இந்த அரசியல் சாசன வரைவு தமிழ் பேசும் மக்களுக்கு ஒரு விடிவாக இருக்கும் தாம் நம்புவதாக குறிப்பிட்டார்.
தமிழ் மக்களுக்கான தீர்வுத்திட்டத்தினை பெற்றுக்கொடுக்காமல் எந்தவித சலுகை அரசியலுக்குள்ளும் அகப்படக்கூடாது என்ற கொள்கை மாறாமல் தமிழ் தேசியக் கூட்டமைப்பு செயல்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் கூறினார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு அபிவிருத்தியில் அக்கறை கொள்ளாமல் அறிக்கை அரசியலை செய்வதாக ஒரு பிரதியமைச்சர் குற்றம் சுமத்தியிருப்பதாக அவர் தெரிவித்தார்.
வெறுமனே பத்திரிகைகளின் பக்கங்களை நிரப்புவதற்காக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அறிக்கைகளை விடவில்லை என கூட்டிக்காட்டிய அவர், அனாவசிய அறிக்கைகளை வெளியிடவில்லை எனவும் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment