Saturday 16 April 2016

கைரியா அதிபரின் தவறுகளை சுட்டிக்காட்டியதால் அச்சுறுத்தல்!

Colombo Mail Today பக்கத்தில் வெளியான கைரிய்யா பாடசாலை திறப்பு விழா தொடர்பான செய்தியை ஜீரணித்துக்கொள்ள முடியாத பாடசாலை நிர்வாகம் திணறிக்கொண்டிருக்கிறது. அதன் தற்போதைய பெற்றார் ஒருவரான பிரதேச அரசியல்வாதி ஒருவர் இந்த செய்தியை வெளியிட்டவருக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்து வருவதாக அறிய வருகிறது.
பாடசாலை நிர்வாகத்தால் ஐதேக பாராளுமன்ற உறுப்பினர் முஜீபுர் றஹ்மானுக்கு புதுக் கட்டிட திறப்பு விழாவிற்கு அழைப்பு விடுக்கப்படாமை தொடர்பாக கேள்வி எழுப்பியதை அதே கட்சியைச் சேர்ந்த இந்த பிரதேச அரசியல்வாதி பாடசாலை நிர்வாகம் செய்தது சரி என்ற ரீதியிலேயே கருத்து தெரிவித்து வந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.

பாடசாலையில் இடம்பெறும் அநீதிகளை சுட்டிக்காட்டும் போது அதனை பாடசாலைக்கு எதிராக செயற்படுவோரின் குரலாக அர்த்தப்படுத்தும் இவர் குறித்த பெற்றோர்களை வசைபாடி அச்சுறுத்தியும் வருகிறார்.
குறித்த இந்த செய்தியில் உள்ள உண்மைத் தன்மையை மூடி மறைக்க முயற்சி செய்யும் இந்த நபர். இது கைரிய்யா பாசாலைக்கு ஏற்பட்ட அவமானம் என்று கூறி கொக்கரித்துத் திரிவதாகவும் அறிய வருகிறது.
கைரியா பாடசாலை வளர்ச்சிக்கு உழைத்தவர்களை நிராகரிப்பது, மறப்பதுதான் கைரியாவிற்கு செய்யும் அவமானம் என்ற யதார்த்தத்தை பரிந்துகொள்ள முடியாமல் இருக்கும் இந்த நபர்,
குறித்த செய்தியை பதிவிட்டருக்கு எதிராக கொலை அச்சுறுத்தலை பகிரங்கமாகவே விடுத்து வருவதாகவும் பெற்றார்கள் மூலம் எமக்கு செய்தி கிடைத்துள்ளது.
ஐதேக மாநகர சபை அங்கத்தவரான குறித்த நபருக்கு எதிராக சட்ட ரீதியிலான நடவடிக்கை மேற்கொள்வதற்கு நாமும் பெற்றோர்களின் உதவியுடன் தீர்மானித்துள்ளோம்.
இன்று கைரிய்யா அதிபரால் ஆலோசகர் போன்று மிகவும் அருகில் வைத்துக்கொண்டு செயற்படுத்தப்படும் குறித்த பிரதேச அரசியல்வாதி மீது அன்று இந்த அதிபர் கைரியாவில் பிரதி அதிபராக இருந்த காலத்தில் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார். (அந்தக் குற்றச்சாட்டுகளை இங்கு பதிவிட முடியாது. அந்தளவிற்கு பாரதூரமானவை)
அன்று இந்த குறித்த நபரை, பெண்கள் பாடசாலையொன்றுக்கு அருகில் கூட எடுக்க தகுதியல்லாதவர் என்று இந்த அதிபர்; விமர்சித்தார். குற்றம் சாட்டினார். அப்போது பாடசாலை சிற்றூழியராக இருந்த குறித்த நபர் பாடசாலை அபிவிருத்தி சங்கம் மேற்கொண்ட நடவடிக்கையின் மூலம்; பாடசாலை நிர்வாகத்தால் உடனடியாக வெளியேற்றப்பட்டார்.
இதன் காரணமாக இன்றைய அதிபர் அன்று குறித்த நபரால் அத்துமீறி பாடசாலைக்குள்ளே புகுந்து கடுமையாக தூஷிக்கப்பட்டு அச்சுறுத்தலுக்குள்ளாக்கப்பட்டார். விடயத்தை பெரிது படுத்த விரும்பாத காரணத்தால் அன்று பாடசாலை நிர்வாகம் சட்ட நடவடிக்கை எதையும் மேற்கொள்ளவில்லை.
தற்போது இதே அதிபர் குறித்த நபரை பாடசாலை விவகாரங்களில் தனது ஆலோசகராகவே வைத்துள்ளார் என நம்பும் அளவுக்கு இவரை சகல நிர்வாக விடயங்களிலும் பயன் படுத்தி வருகிறார். அன்று பெண்கள் பாடசாலைக்கு பக்கத்துக்கும் எடுக்க கூடாது என்று கூறிய அதிபர் இன்று குறித்த நபரை ' இவர் எங்க வீட்டுப் பிள்ளை' என செல்லமாக வர்ணித்து வருவதாகவும் அறிய வருகிறது.
பாடசாலை தொடர்பான ஒரு செய்தியை உள்வாங்கி தமது தவறுகளை பிழைகளை திருத்திக்கொள்ள தயக்கம் காட்டும் பாடசாலை அதிபரும் நிர்வாகமும் 'மெர்வின் சில்வா பாணி'யில் அச்சுறுத்தல் விடும் குறித்த நபருக்கு ஆதரவு தெரிவித்து வருவதில் உள்ள அபாயத்தை வெகு விரையில் உணரத்தான் போகின்றார்கள்.

No comments:

Post a Comment