![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgq1vZ7-H0Iwt6p4Cm8nm85I8C8BQZVky4FccSNlk0JUvkBJCruGUY6Gz2ErIXsKG05dEMqgBI4zE9Y4SKZvS9r7hparULTIE5bmg5YbpuGtJgRT-juiQAIk_2tqUct_DyM75qDl-CaF8dE/s400/z_p-06-no-u.jpg)
உலக நாடுகளை அடிப்படையாகக் கொண்டு அமெரிக்க இராஜாங்க திணைக்களம் வருடாந்தம் மனித உரிமைகள் தொடர்பான அறிக்கையொன்றை கடந்த புதன்கிழமை வெளியிட்டிருந்தது.
யுத்தத்தின் பின்னர் அதன் வடுக்களிலிருந்து மீண்டுவரும் ஸ்ரீலங்கா, கடந்த காலத்தில் மனித உரிமையைப் பாதுகாப்பதற்கு கடும் பிரயத்தனம் எடுத்துள்ளதாக இவ்வருட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த பிரயத்தனத்திற்கு அறிக்கையின் ஊடாக பாராட்டும் தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும், மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட குற்றவாளிகள் தொடர்ந்தும் தண்டனையிலிருந்து தப்பித்துக்கொண்டிருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இது குறித்து ஊடகமொன்றிற்கு கருத்து வெளியிட்டுள்ள சபை முதல்வரும் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல, புதிய அரசாங்கம் நாட்டில் ஜனநாயகத்தையும், மனித உரிமையையும் பலப்படுத்தியிருப்பதாகக் கூறியுள்ளார்.
இதேவேளை சிவில் அமைப்புக்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் நபர்கள் மீது விடுக்கப்படும் அழுத்தங்கள் தொடர்பாகவும், அமெரிக்காவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் அமெரிக்காவின் இந்த அறிக்கையை விரிவாக ஆராய்த பின்னர் இது குறித்து அரச தரப்புடன் கலந்துரையாடிய பின் நிலைப்பாடு அறிவிக்கப்படும் என்று அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல மேலும் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment